மோடி அரசாங்கம்… ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா?
நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருப்பதால், பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் வரும் என்கிற நம்பிக்கை உருவாகி இருக்கிறது. தொழில் துறை மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கும், மோடி அரசாங்கம் இதற்கு என்ன செய்ய வேண்டும் என முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்டோம்.
”பங்குச் சந்தைபோல, ரியல் எஸ்டேட் துறையில் உடனடி எதிர்வினையை எதிர்பார்க்க முடியாது. புதிய அரசாங்கம் எடுக்கப்போகும் பல்வேறு முடிவுகளைப் பொறுத்தே இந்தத் துறையின் வளர்ச்சி இருக்கும். எனவே, ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய மாற்றம் ஏதும் ஏற்பட வேண்டுமெனில், குறைந்தபட்சம் 6 – 9 மாதங்களாவது காத்திருக்க வேண்டும்.