என்.ஆர்.ஐ-களுக்கு உள்ள வெவ்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பார்ப்போம்.
வெளிநாட்டு வாழ் இந்தியர் கீழ்க்கண்ட முதலீட்டு சாதனங்க ளில் வரையறையின்றி முதலீடு செய்து, தேவைப்படும் பொழுது தான் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
1. அரசாங்க கடன் பத்திரங்கள்
2. மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டு கள்
3. பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்கள்
4. கம்பெனிகள் வெளியிடும் என்.சி.டி-க்கள் (NCD Non-Convertible Debentures)
5. வங்கிகள் வெளியிடும் கடன் சார்ந்த உபகரணங்கள்
6. பொதுத்துறை நிறுவனப் பங்குகள்
7. அந்நிய நேரடி முதலீட்டு (FDI Foreign Direct Investment) முறை மூலம் கம்பெனி பங்குகள் மற்றும் மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் (CONVERTIBLE DEBENTURES) மற்றும் இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள்
என்.ஆர்.ஐ.க்கள் கீழ்க்கண்ட முதலீடுகளில் திரும்ப தான் வாழும் நாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாத (NON-REPATRIATION) முறையில் வரையறையின்றி முதலீடு செய்யலாம்.
1. அரசாங்க பத்திரங்கள்
2. மியூசுவல் ஃபண்டு யூனிட்டுகள்
3. மணி மார்க்கட் மியூசுவல் ஃபண்டு யூனிட்டுகள்
4. தேசிய சேமிப்பு பத்திரங்கள்
5. என்.சி.டி-க்கள்
6. பங்குச் சந்தைகள் மூலமாக பங்குகள் மற்றும் மாற்றிக் கொள்ளக்கூடிய கடன் பத்திரங்கள் (CONVERTIBLE DEBENTURES)
7. பங்குச் சந்தைகளில் வர்த்தக மாகும் டெரிவேடிவ் காண்ட்ராக் டுகள்
இவற்றில் எல்லாம் முதலீடு செய்ய முடிந்த பொழுதிலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பி.பி.எஃப் (PPF) என்று அழைக்கப்படும் மிகவும் பாபுலரான பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற வாரம் பார்த்தது போல், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அடிக்கடி ஏற்படும் இன்னும் சில கேள்விகளையும் அதற்கு உண்டான பதில்களையும் கீழே காண்போம்.
1. இந்தியாவில் வசிப்பவர்கள் வெளிநாட்டில் வாழும் அவர்க ளது நெருங்கிய உறவினரை, தங்களது உள்நாட்டில் உள்ள சேமிப்பு கணக்கில் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஹோல்டராக சேர்த்துக் கொள்ள முடியுமா?
தாராளமாக சேர்த்துக் கொள்ள லாம் முன்னவர் அல்லது இருப்ப வர் (FORMER OR SURVIVOR) என்ற அடிப்படையில் கணக்கைத் திறந்து கொள்ளலாம். ஆனால் வெளிநாட்டு வாழ் உறவினர், உள்நாட்டில் இருப்பவர் உயிரோடு இருக்கும்வரை அந்த கணக்கை ஆப்பரேட் செய்யமுடியாது.
2. உள்நாட்டில் வசிப்பவர் வெளி நாட்டில் வாழும் நெருங்கிய உறவினருக்கு அன்பளிப்பாக பங்குகள், கடன் பத்தி ரங்கள் போன்றவற்றை அளிக்க லாமா?
நன்றாக அன்பளிப்பு கொடுக்கலாம் வருடத்திற்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்தியாவில் வாழ்பவர்கள் தங்களது நெருங்கிய வெளி நாட்டு உறவினருக்கு ரூபாயை அன்பளிப்பாக கொடுக்கலாமா?
அன்பளிப்பு கொடுக்கலாம் சில வரையறைகளுக்கு உட்பட்டு. அவ்வாறு கொடுக்கப்படும் அன்பளிப்பு காசோலை மூல மாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ வருடத்திற்கு 2 லட்சம் அமெரிக்க டாலருக்கு மிகாமல் உறவினரின் என்.ஆர்.ஓ கணக்கிற்கு கொடுக்கப்பட வேண்டும்.
4. உள்நாட்டில் வாழ்பவர்கள் தங்களது நெருங்கிய வெளி நாட்டு உறவினர்களுக்கு எவ்வகையான செலவு களுக்காக பணத்தை கொடுக்கலாம்?
என்.ஆர்.ஐ உறவினர் இந்தியா வரும்பொழுது அவருடைய போக்குவரத்துச் செலவுகள், சாப்பாடு, தங்கும் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்றவற்றிற்கு தேவையான பணத்தைக் கொடுக்கலாம்.
Courtesy : The Hindu